தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைக்கிராமம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கர்நாடக அரசுப் பேருந்து 50 பயணிகள் ஏற்றிக் கொண்டு தாளவாடிக்கு சென்றுகொண்டிருந்தது. பேருந்தைத் தண்டபாணி என்பவர் ஓட்டினார். அதில் நடத்துநர் மகேஷ் பணியில் இருந்தார்.
விபத்தில் சிக்கிய கர்நாடக அரசுப் பேருந்து; 50 பேர் காயம்! - Karnataka government bus accident
ஈரோடு: தாளவாடி அருகே கர்நாடக அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் 50 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பந்து நல்லி அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்குச் சாலையோரமாகத் திரும்பிய பேருந்து, சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது. இதில் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர்.
விபத்தின்போது மின்தடை இருந்ததால், மின்கம்பத்தில் மின் விநியோகம் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் அவசர ஊர்தி மூலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் காவல் துறையில் விசாரணை செய்துவருகின்றனர்.