ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி, கொள்ளேகால் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், வெங்காயம் சாகுபடிக்கு ஏற்ற சூழல் நிலவியதால் சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது விதை வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.40-லிருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது.
புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் ஆகியன விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி, இன்று (மே 26) கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட விதை வெங்காய மூட்டைகள் விற்பனை ஆகின. விதை வெங்காய விலை கிலோ ரூ.20 ஆக குறைந்ததால் விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றனர்.