ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாலை 6 மணிக்கு மேல் வரும் கனரக வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று (செப்.14) தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால், திம்பம் வழியாக கர்நாடக செல்லும் கனரக வாகன ஓட்டுநர்கள் பண்ணாரி கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கரும்பு தேடி உலா வந்த ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டியபோது பண்ணாரி கோயில் தெப்பக்குளம் வழியாக யானை சென்றது.
யானை தாக்கி உயிரிழந்த சீனிவாசன் படம், அவரின் ஓட்டுநர் லைசென்ஸ் அப்போது அங்கிருந்த ஓட்டுநர்கள் யானையைப் பார்த்து சத்தம் போட்டனர். இதனால் எரிச்சலடைந்த யானை அங்கிருந்தவர்களை துரத்தியதால் அனைவரும் சிதறி ஓடினர்.
யானை தாக்கியதில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு அதில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவள்ளியைச்சேர்ந்த ஓட்டுநர் சீனிவாசன்(43) என்பவர் யானையிடம் சிக்கினார். அப்போது யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, உடல் உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தன் உயிர் போனாலும் பரவாயில்லை..குழந்தையை காப்பாற்றினால் போதும்..