பயங்கரவாதிகளைக் கண்டறிய காவல் துறையினர் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பித் தலைமறைவாகினர்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய உதவி ஆய்வாளர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து கண்காணிப்புக் படக்கருவியில் பதிவான இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
துணைத்தலைவர் பதவிக்காக 20 ஆண்டு நண்பனை கொலை செய்த கொடூரம்.!
இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க, மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையும், கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லையில் வாகனச் சோதனை தீவிரம் அதன் ஒரு பகுதியாக ஈரோடு, நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடிப் பகுதியிலும் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைச்சாவடியை கடக்கும் அனைத்து வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்படுவதுடன் வாகன ஓட்டுநர்களின் தொடர்பு எண், முகவரி ஆகியவையும் சேகரிக்கப்பட்டு வருகிறது.