ஈரோடு: தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடியில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் பண்ணை வீடு உள்ளது. நடிகர் ராஜ்குமார் இறந்த பிறகு அவரது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் பண்ணை நிலம் மற்றும் விவசாயத்தை கவனித்து வந்தனர்.
அண்மையில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் சிவராஜ்குமார் அவ்வவ்போது பண்ணை வீட்டுக்கு வந்த நிர்வாகித்து வந்தார். இந்நிலையில் சிவராஜ்குமார், தனது நண்பரான பிரபல கன்னட நடிகர் டாலி தனஞ்செய்னுடன் இன்று தாளவாடி வந்தார். இரு நடிகர்கள் தாளவாடி வருவதை அறிந்த மைசூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால், குண்டல்பேட் ரசிகர்கள் தாளவாடியில் திரண்டனர்.