ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சுற்றிலும் யானை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் நடமாடுகின்றன. பல்வேறு மலைக் கிராமங்களில் இருந்துவரும் மக்கள் சத்தியமங்கலம் உள்ளிட்ட பிற சமவெளி பகுதிகளுக்குச் செல்ல கடம்பூர் பேருந்து நிலையம் வந்துசெல்கின்றனர்.
இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதால் அனைத்துப் பேருந்துகளும் கடம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் யானை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் நடமாடுகின்றன. கடந்த 15 நாள்களாக பேருந்து நிலையத்தில் உள்ள உயர் கோபுர தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
கடம்பூர் மலைக்கிராமத்தில் பேருந்து நிலையம் இதனால் பயணிகள் பேருந்து நிலைய வளாகத்தில் கழிப்பறைகளில் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்ல அச்சப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் யானை, கரடி போன்ற விலங்குகள் தெரியாத நிலை உள்ளது.
வனவிலங்குகள் அதிகம் நடமாடும் கடம்பூர் மலைப்பகுதியில் மக்கள் மின்வசதி மிகவும் அவசியமாகிறது. எரியாத கடம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உயர்கோபுர விளக்கை சீரமைத்து பிரகாசமாக ஒளிரச்செய்ய ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் அனைத்து தெருவிளக்குகள் எரிய போதுமான மின்வசதி செய்துதர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
சரிசெய்யப்படாத மின்விளக்குகள் அண்மையில் வனத்திலிருந்து வெளியே வந்த கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பலம் இழக்கும் காங்கிரஸ்? மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா