ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிவருகிறது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், பெருந்துறை ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறது.
'செல்வாக்கை நிரூபித்த செங்கோட்டையன்' - கோபியில் தொடர் முன்னிலை - ADMK ladian bhavanisagar
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் தொகுதிகள் 8ஆவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் ஏழாவது சுற்று முடிவில் முன்னிலை வகித்துவருகிறார்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏழாவது சுற்று முடிவில் 6 ஆயிரத்து 167 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதாவது அமைச்சர் செங்கோட்டையன் 34 ஆயிரத்து 779 வாக்குகளும் திமுக வேட்பாளர் மணிமாறன் 28 ஆயிரத்து 609 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
1980 முதல் 2016 வரை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஏழு முறை செங்கோட்டையன் வெற்றிபெற்று, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார். இதிலிருந்தே, தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கை உணர்ந்து கொள்ளலாம்.