தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இன்று(ஏப்.25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு, உணவகங்கள், தேனீர் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில், அவசரப் பணி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல் துறையினர் தேநீர், உணவுகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கிய பத்திரிகையாளர்கள்! - காவல்துறையினர்
ஈரோடு: முழு ஊரடங்கின்போது பணியாற்றிவரும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனை சுகாதாரத் துறை பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், காவல் துறையினருக்கு பத்திரிகையாளர்கள் பிஸ்கட், தேநீர் வழங்கி கவுரப்படுத்தினர்.
இதை கருத்தில் கொண்டு, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் சார்பாக, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இன்று(ஏப்.25) பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்நர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும், பிஸ்கட், தேநீர் வழங்கி கவுரவித்தனர்.
அதைத்தொடர்ந்து மொடச்சூர் சிக்னல் அருகில் கடும் வெயிலிலும் சாலையில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் பிஸ்கட், தேநீர் வழங்கினர். அதேபோன்று தாசில்தார், வருவாய்த்துறையினருக்கும் தேனீர், பிஸ்கட் வழங்கினர்.