தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலகளாவிய இயற்கைக்கான நிதியம்: மலைவாழ் மக்களின் புதிய முயற்சி! - சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்

உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (Worldwide Fund For Nature), என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில், ஆண்டுதோறும் மார்ச் 27ஆம் தேதி, புவி நேரம் (EARTH HOUR) என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.

புதிய வகை மண் அடுப்புகள்
புதிய வகை மண் அடுப்புகள்

By

Published : Mar 26, 2021, 10:55 PM IST

புவி நேரம் (EARTH HOUR) மார்ச் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. புவி நேரம் என்பது இயற்கையைப் பற்றி பேசுவதற்காகவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காகவும் மட்டுமல்லாமல், நமது உடல்நலம், மகிழ்ச்சி, செழிப்பை உறுதிசெய்வதற்கும், மேலும் இயற்கையைப் பாதுகாக்க பல உரையாடல்களைத் தூண்டுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

புகை இல்லாத சமையலறை

நாம் பல வழிகளில் நம்முடைய தேவைகளுக்காக இயற்கையை அழித்துவருகிறோம். இதனால் நம்முடைய சுற்றுப்புறச்சூழல் மிகவும் பாதிப்படைந்துவருகிறது. இருப்பினும் இன்றையக் காலக்கட்டத்தில் பல்வேறு மக்கள் இயற்கையின் மகத்துவத்தை புரிந்துகொண்டு அவற்றின் வளங்களை அழிக்காமல் தங்களுடைய தேவைகளை மாற்று வழியில் நிறைவேற்றிவருகின்றனர்.

அவ்வாறு செய்வதன்மூலம், இயற்கையைப் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கையின் சக்தியை நாம் அடையாளப்படுத்தலாம்.

புகை இல்லாத சமையலறை

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், இயற்கையைப் பாதுகாக்க எளிய மக்களின் முயற்சி வெற்றியடைந்துள்ளது. அங்கே 70 கிராமங்களில் வசிப்பவர்கள் படிப்படியாகச் சமைப்பதற்காக விறகுகளை நம்பியிருப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டை நோக்கி நகர்கின்றனர்.

சத்தியமங்கலத்தின் குக்கிராமங்களில் விறகு போன்ற வன விலங்குகளின் பயன்பாட்டைக் குறைக்க WWF இந்தியா சமூகங்களுக்கு ஆதரவளித்துவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய வகை மண் அடுப்புகள் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும்விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் புகை இல்லாத சமையலறைக்கு வழிவகுப்பதோடு நுகரப்படும் விறகுகளின் அளவு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.

இதுவரை 44-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 1000 வீடுகளுக்கு மேல் இந்த அடுப்புகள் சென்றடைந்துள்ளன. இவை நமது காடுகளின் பாதுகாப்பிற்கு பெருமளவில் பங்களிப்பதோடு, மக்களையும் சுவாசக்கோளாறுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

சத்தியமங்கலத்தின் மலைவாழ் மக்கள், தங்களுக்கும், தாங்கள் வாழும் காட்டுக்குமான உறவை மேம்படுத்தும் வகையில் எடுத்திருக்கும் ஒரு எளிய முயற்சியே இந்த மண் அடுப்புகள்.

இவ்வாறு மக்கள் இயற்கைக்கும், தங்களது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்காத வகையில் புதிய முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுத்தவரின் மகன் பாஜகவுக்குத் தாவல்

ABOUT THE AUTHOR

...view details