ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி, இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முத்தரசன் சத்தியமங்கலம் வந்தார்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து, பெயர்ப் பலகையைத் திறந்துவைத்து பேசுகையில்,
"வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமற்ற ஒன்று. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்காமல் மக்களவை, மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் பெரும்பான்மை உள்ளதால் தன்னிச்சையாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு