தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! - ஈரோடு பாண்டியன் ஏஜென்சிஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

ஈரோடு: குழாய் விற்பனை நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பாண்டியன் ஏஜென்சிஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
ஈரோடு பாண்டியன் ஏஜென்சிஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

By

Published : Mar 3, 2020, 6:16 PM IST

ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் செயல்பட்டு வருகிறது, எல்.யாதரன், ராவணன் ஆகியோருக்குச் சொந்தமான ஏஜென்சிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் குழாய்கள், உயர் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மின் மோட்டார்கள், கழிவறை உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் இன்று இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

இந்த சோதனை, முறையான வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்யாததால் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஈரோட்டில் வணிக நிறுவனங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருவது, வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீட்டை காரணம் காட்டி வீட்டிலிருந்து தனி அறைக்கு ஒதுக்கப்படும் பெண்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details