தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஈரோட்டில் மனித சங்கிலி - Human chain against CAA in Gobichettipalayam

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

கோபிச்செட்டிபாளையத்தில் சிஏஏவை எதிர்த்து மனித சங்கிலி
கோபிச்செட்டிபாளையத்தில் சிஏஏவை எதிர்த்து மனித சங்கிலி

By

Published : Jan 31, 2020, 7:49 PM IST

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, மதிமுக, விசிக, மமக, திக, சிபிஐ உள்ளிட்ட கட்சியினர் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்தச் சட்டம் (சிசிஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) ஆகிய சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கோபிச்செட்டிபாளையத்தில் சிஏஏவை எதிர்த்து மனித சங்கிலி

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காந்தி சிலை அருகில், ஓசூர் அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வங்கி ஊழியர்கள் 11ஆவது ஊதிய உயர்வை விரைவில் அறிவிக்கக்கோரியும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஒசூரில் வங்கி ஊழியர்கள் போராட்டம்

அப்போது பேட்டியளித்த ஓசூர் அனைத்து ஊழியர் கூட்டமைப்பின் தலைவர், "மத்திய அரசு நியாயமான ஊதிய உயர்வான 20 விழுக்காட்டை அறிவிக்க வேண்டும், அதற்காக இரண்டு நாள்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்" என்றனர்.

இதையும் படிங்க:

ஜம்முவில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details