ஈரோடு: மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுவருகிறது. இதனால், இன்று (ஆக.4) காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால், பவானி-குமாரபாளையம் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கந்தன்பட்டறை, காவேரி நகர் ஆகியப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சுமார் 325 நபர்களை 3 முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.