தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெருந்துறை கூட்டுக்குடிநீர்த் திட்டம்: உயர்மட்டக் குழுவினர் ஆய்வு - பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம்

ஈரோடு: கொடிவேரி அணைப்பகுதியிலிருந்து பெருந்துறை கூட்டுக்குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்ற உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொடிவேரி அணை

By

Published : Jun 25, 2019, 8:07 AM IST

கொடிவேரி அணைப்பகுதியிலிருந்து பெருந்துறை, சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதி மக்களுக்காக கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.2.40 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. குழாய் மூலம் தினமும் 17.23 மில்லியன் லிட்டர் நீர் எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடிநீர் எடுப்பதால் பாசன பகுதிக்கான நீர் பாதிக்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குடிநீர் திட்டத்திற்கு எடுக்கப்படும் நீரால், பாசனத்திற்குத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பாசனப் பகுதிகள் பாதிக்கப்படும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றும் வகையில் பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த் துறை, பாசன சபை ஆகியவைகளில் உள்ள உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை நீர்வள மேற்பார்வைப் பொறியாளர் உதய்சிங் தலைமையில் 18 அரசு அலுவலர்கள் கொண்ட உயர்மட்டத் தொழில்நுட்ப வல்லுநர் குழு கொடிவேரி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட அணைப்பகுதியில் தோண்டப்பட்டக் கிணறு தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குச் செல்லும் கால்வாய் அணையின் தண்ணீர் தேக்கம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பெருந்துறை கூட்டுக்குடிநீர்த் திட்டம்; உயர்மட்டக் குழுவினர் கொடிவேரி அணையில் ஆய்வு

இந்த ஆய்வறிக்கை மூன்று நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அதன் பிறகு குடிநீர்த் திட்டம் செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் எனவும் உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details