ஈரோடு:தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பமான சூழ்நிலை தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.