1958 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சீர்திருத்த மாநாட்டின்போது கட்டப்பட்டு வளைவு சேதமடைந்ததால், புதிதாக கட்டப்பட்ட வளைவுக்கு காமராஜரின் பெயரை வைக்க உத்தரவிட வேண்டும் என கொங்குநாடு சான்றோர் குல நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அரசிடம் கோரிக்கை மனு அளித்தவுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அபராதம் - நீதிமன்றம்
சென்னை: கோபிச் செட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டும் புது வளைவுக்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிய மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![அரசிடம் கோரிக்கை மனு அளித்தவுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அபராதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2389711-271-2689bdbc-52d8-4ed3-bf26-708a9ee86556.jpg)
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, அரசிடம் கோரிக்கை மனு அளித்த உடனே மனுதரார் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி, மனுதாரருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இதேபோல திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் கிராமத்தில் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க தடை கோரி அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பள்ளி மற்றும் கோவில் அமைந்துள்ளதால் அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என கணேசன் தன் மனுவில் கோரியிருந்தார்.