ஈரோடு:வாரணாசியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட காசி விஸ்வநாதர் கோயிலை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி (டிச.13) நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக ஒளிபரப்பு செய்யும் வகையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் மண்டபத்தில் பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாஜக மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் தலைமையில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளே சென்றவர்கள் கோயில் வளாகத்தில் ஒளிபரப்பு செய்ய முயன்றனர். இதற்குக் கோயில் செயல் அலுவலர் ரமேஷ் மறுத்துள்ளார்.
இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் செயல் அலுவலர் உடன் வாக்குவாதத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதனை அடுத்து நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய முன் அனுமதி பெறாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி மறுத்த செயல் அலுவலர்
மேலும், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை மடிக்கணினி மூலம் கோயில் வளாகத்திற்குள் வைத்து பாஜகவினர் கண்டுகளித்தனர். அதனைத் தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம் பாஜகவினர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி இல்லாததால் வெளியே செல்லுமாறு கூறினர். இதனால் அனைவரும் கோவில் வளாகத்திலிருந்து வெளியேறினர்.
இது குறித்து, பாஜக மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியல் சார்பு இல்லாமல் அனைத்து கோயில்களிலும் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார். நான்கு நாட்கள் தொலைபேசியில் பேசிய பின்பும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுத்துள்ளார்.