தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிகாலை 4 மணி...சந்தேகத்திற்கிடமான கார்' - பின்தொடர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா! - ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

ஈரோடு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

By

Published : Nov 18, 2019, 1:37 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பழைய பேருந்து நிலையம் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவர் அண்ணராஜ் (49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் 2 மளிகைக் கடைகள் வைத்து நடத்தி வருகிறார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் நான்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் சந்தேகப்பட்ட நிலையில் ஒரு காரை பின்தொடர்ந்து சென்றபோது பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மளிகைக் கடை முன் நின்றது. அப்போது அந்த காரில் சுமார் 35 கிலோ கிராம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இதனையடுத்து அந்த மளிகைக் கடை உரிமையாளர் அண்ணராஜ் வீட்டில் சென்று பார்த்த அதிகாரிகள், ஒரு அறையில் மூட்டை மூட்டையாக சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டறிந்து, உடனடியாக அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் பெருந்துறைப் பகுதியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

gudka seized

ABOUT THE AUTHOR

...view details