ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை, தொட்டபுரம், முதியனூர், நெய்தாளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நெய்தாளபுரத்தில் காட்டாற்று வெள்ளம் தரைபாலத்தை மூழ்கடித்தது.
இந்நிலையில், இன்று (செப்.6) தாளவாடியில் இருந்து 25 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று நெய்தாளபுரம் தரைப்பாலத்தில் ஓடும் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முயன்றபோது, வெள்ளத்தில் சிக்கியது. தொடர்ந்து இதுகுறித்து ஓட்டுநர், நடத்துநர் தாளவாடி அரசுப் போக்குவரத்து பணிமனைக்குத் தகவல் தெரிவித்தனர்.