ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அப்போது வீட்டுமனை பட்டா தங்களுக்கு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், 15 நாட்களில் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்தான் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். 55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிப்பது குறித்து அவர்கள் தேர்தல் ஆணையித்திடம் முறையிடுவதுதான் சரியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நடத்தப்படும்.