தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி - அரசுப் போக்குவரத்துக் கழகம்

அரசு பேருந்து மோதி விபத்தில் காயமடைந்தவருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற ஊழியர்கள்
நீதிமன்ற ஊழியர்கள்

By

Published : Dec 16, 2021, 8:17 PM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அரக்கன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ், அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு தேவராஜ் சத்தியமங்கலம் சென்றுவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கொண்டப்பநாய்கன்பாளையம் பிரிவு அருகே அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதை ஓட்டி வந்த தேவராஜ் காலில் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அதில் அரசுப் போக்குவரத்துக் கழகம் தேவராஜுக்கு ரூ.4,62,165 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்

இதில் ரூ.3,50,000 அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்திய நிலையில் மீதமுள்ள தொகையைக் கடந்த 2 ஆண்டுகளாக தேவராஜிற்கு வழங்காமலிருந்தது.

அதைத்தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் பாக்கி தொகையை இன்று வரை செலுத்தாத நிலையில், அரசு பேருந்தைப் பறிமுதல் செய்ய நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று(டிச.16) கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர் செல்ல தயாராக இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தில் உத்தரவு நகலை ஒட்டி, பேருந்தைப் பறிமுதல் செய்து, நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் மகன் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details