ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜூலை 17) அதிகாலை முதலே மொடச்சூர் ஆட்டு சந்தையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ரக ரகமாக குவிந்த ஆடுகள்
கரோனா பொதுமுடக்கத் தளர்வால் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கானோர் வேன்கள் மூலம் செம்மறி ஆடு வாங்க குவிந்தனர்.
கோபிசெட்டிபாளையம், சிறுவலூர், கொளப்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு, வெள்ளாடு; கர்நாடக பர்கூர்,மைசூர் மலை பகுதிகளிலிருந்து கருப்பு ஆடு என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.