ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அய்யாவின் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சுமார் 22 லட்சம் வேளாண் பம்பு செட்டுகளுக்கு பல விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து இலவச மின்சாரம் பெற்றுத்தந்தவர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அய்யா என்றும், தற்பொது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே மின்சாரம் என்ற கொள்கையை கொண்டுவர பரிசீலனை செய்து வருவதாகவும்,
நாராயணசாமி அய்யா பெற்றுத்தந்த இலவச மின்சாரத்தை மத்திய அரசின் கொள்கையால் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் விவசாய இலவச மின்சாரத்திற்கு தீங்கு வருமானால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறூ :
* பால் கொள்முதல் விலையை எருமைப்பாலுக்கு 60 ரூபாயும் பசும்பாலுக்கு 50 ரூபாயும் உயர்த்தி வழங்கவேண்டும்.
* தேசிய வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.
* கரும்பு வெட்டிய 15 தினங்களுக்குள் சர்க்கரை ஆலைகள் நிலுவையின்றி பணம் பட்டுவாடா செய்யவேண்டும். கட்டுப்படியான விலையை டன் ஒன்றுக்கு ரூ.5000ஆக அரசு நிர்ணயம் செய்யவேண்டும்.
* மஞ்சள் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் என டான்பெட் மூலம் கொள்முதல் செய்யவேண்டும்.
*அரசு கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு லஞ்சமாக ரூ.45 வரை வாங்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
* 55 வயதை கடந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதாமாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்.
*கிராமப்பகுதியில் படிப்பை முடித்த விவசாயிகளின் வாரிசுகளுக்கும் விவசாய கூலித்தொழிலாளர்கள் வாரிசுகளுக்கும் கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலையில் 50 விழுக்காடு வழங்கப்படவேண்டும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். என்பன உட்பட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உழவர் பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், ஏர்முனை இளைஞர் அணி செயல்தலைவர் வெற்றி ,சட்ட ஆலோசகர் லட்சுமி நாராணயன், வழங்கறிஞர் ஈசன் செல்வராஜ், கள் இயக்கத்தலைவர் நல்லசாமி, தடப்பள்ளி அரக்கோட்டை பாசன சபை தலைவர் சுபிதளபதி, மாவட்ட தலைவர் சின்னசாமி ,மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நஞ்சப்பன் ஆகியோர் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :