தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மான் இறைச்சி சமைத்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம்! - 4 பேர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகரை அடுத்த சுஜ்ஜல் குட்டையில் மானை வேட்டையாடி சமைத்த நான்கு பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

4 person arrested for deer meat cooked
4 person arrested for deer meat cooked

By

Published : Jul 30, 2020, 2:58 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்த சுஜ்ஜல்குட்டையில் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுஜ்ஜல் குட்டை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்து கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து மான் வேட்டையில் ஈடுபட்டதாக சார்லஸ்(38), சூரியபிரகாஷ்(20), ராமர்(35), அருள்குமார்(18) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் நான்கு பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தொகையை கட்டியதால் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details