ஈரோடு: சத்தியமங்கலம் திப்புச்சுல்தான் சாலையில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மே.1) மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தம் பேசுகையில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறைவேற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 இடங்களை கைப்பற்றும் என்று கொட்டும் மழையில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.