ஈரோடு: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் நவாஸ் வேணா தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்களில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சோதனை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று(ஆக.24) ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்வம், அருண்குமார், ஏட்டிகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈரோடு மாநகரப்பகுதியில் பல்வேறு உணவகங்கள், ஹோட்டல்களில் சென்று சோதனை செய்தனர். அப்போது குமரன் குட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது நேற்று சமைத்து வைக்கப்பட்டிருந்த இறைச்சி கறிகள், கிரில் சிக்கன், புரோட்டா ஆகியவை இன்று மீண்டும் பயன்படுத்துவதற்காக ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.