தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொடிவேரி அணையில் வெளியேறும் உபரி நீர் - கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கொடிவேரி அணையில் வெளியேறும் உபரி நீர்

கொடிவேரி அணையில் வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருதல் அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடிவேரி அணையில் வெளியேறும் உபரி நீர்
கொடிவேரி அணையில் வெளியேறும் உபரி நீர்

By

Published : Nov 9, 2021, 10:31 AM IST

ஈரோடு:கடந்த சில நாள்களாக பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் அணைப் பகுதியில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்கவும், மீன்பிடித்தல், துணி துவைத்தல் போன்றவற்றிற்காக ஆற்றில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடிவேரி பகுதியில் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:TN Rains: பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details