தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரத்துபாளையம் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து 2023 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 10, 2022, 1:00 PM IST

Updated : Aug 10, 2022, 3:14 PM IST

ஈரோடு:மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் பெய்து மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, நேற்று (ஆக.9) மாலை 4 மணி அளவில் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்து, வினாடிக்கு 2523 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 2023 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

ஒரத்துபாளையம் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம்

வெள்ள அபாய எச்சரிக்கை:நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடந்து செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தடை!

Last Updated : Aug 10, 2022, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details