ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், அரிய வகை பறவைகள், பட்டாம் பூச்சிகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் பட்டாசு வெடிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தற்போது யானைகள் இனப்பெருக்கம் காலம் என்பதால் தலமலை வழியாக இடம்பெயருவதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. பயங்கர சத்தம் எழுப்பும் வெடி, இரவு நேரங்களில் ராக்கெட் விடும்போது அவை வனத்தில் விழுந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் ் புலிகள் காப்பக பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.