ஈரோடு:சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. அங்கு மாசித் திருவிழாவினை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் சப்பரத்தில் பவனி வருவது வழக்கம்.
அவ்வாறு வரும் வழியில் பெண் பக்தர்கள் படுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, வழிநெடுகிலும் படுத்திருந்த பக்தர்களைத் தாண்டி பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றபோது பக்தர்கள் பரவசமடைந்தனர்.
முன்னதாக, பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் மார்ச் 7ஆம் தேதி, திங்கள்கிழமை தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கிராமங்களில் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகுமாரியம்மன் வீதியுலா நடந்து வருகிறது.