ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களில் சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதாகவும், இதனால் வாகன போக்குவரத்தை தடைசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 10ஆம் தேதி திம்பம் மலைப்பாதை இரவுநேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தினர் ரிட் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டபிறகு ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் 16.2 டன்னுக்கு குறைவாக உள்ள காய்கறி லாரிகள் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளூர் மக்கள் நேற்று(ஏப். 10) இரவு முதல் காய்கறி வாகனங்கள் இயக்குவதற்கு தயாராக இருந்தனர்.
பேச்சுவார்த்தை: இந்நிலையில் இரு மாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில், கர்நாடகத்தில் இருந்துவரும் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலை 6 மணிக்கு மேல் பிக்கப், மினி லாரி செல்லக்கூடாது என வனத்துறை மூலம் தாளவாடி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.