ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுக்கரைப்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தில் குத்தகைதாரர்களின் நெல்லை கொள்முதல் செய்யாததைக் கண்டித்து அப்பபகுதி விவசாயிகள் அந்தியூர்-கோபிசெட்டிபாளையம் சாலையில் இன்று (செப்.15) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலைங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளில் தற்போது முதல்போக சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும். அவ்வாறு அந்நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல்லைத் தடுக்கும் விதமாக, நெல்கொள்முதல் நிலையங்களில் நில உரிமையாளர்களின் ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.