தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் - வீடியோ வெளியிட்டு விவசாயி கோரிக்கை - வீடியோ வெளியிட்டு விவசாயி கோரிக்கை

ஈரோடு அருகே கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது என விவசாயி பழனிச்சாமி வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

By

Published : May 15, 2022, 2:51 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி பனைமரத்து காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வாழை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

இவரது தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றாலும் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இவரது தோட்டத்து வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான அமைந்துள்ளதாகவும் ஐந்தடி தூரத்தில் கைக்கெட்டும் அளவில் இருப்பதால் யானைகள் மற்றும் பிற விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மேலும் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்திற்கு கீழ் மின்சாரம் பாய்வதால் மனிதர்கள், விலங்குகள் செல்லும்போது மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது. தாழ்வாக உள்ள இந்த மின் கம்பியால் வாழை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

மிக உயரமாக பாதிப்பில்லாத வகையில் அமைக்கப்பட வேண்டிய பின் கம்பி தாழ்வாக இருப்பதால் இதற்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் மின்வாரிய பொறுப்பேற்க வேண்டுமென விவசாயி பழனிச்சாமி அரசுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மின்வாரியம் மற்றும் வருவாய் துறையினர் தாழ்வான கம்பியை அகற்றி வனவியல் மற்றும் மனிதர்கள் பாதிக்காதவாறு சற்று உயரமான அமைக்க வேண்டுமென விபத்து நிகழும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நேமம் பெரியகண்மாயில் மீன்பிடித் திருவிழா: உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள்

ABOUT THE AUTHOR

...view details