தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்த கிராம ஊராட்சி! - Gopisettipalaym

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கிராம ஊராட்சியில் மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் ஒழலக்கோயில் கிராமம்
கோபிசெட்டிபாளையம் ஒழலக்கோயில் கிராமம்

By

Published : Jun 7, 2021, 6:14 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே ஒழலக்கோயில் ஊராட்சியில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ஊராட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 14ஆம் தேதி வரை ஒழலக்கோயில் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர காய்கறி, மளிகைக் கடைகள், ஓட்டல்கள், இறைச்சிக்கடைகள், வியாபார நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், இதர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் திறக்க தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் ஒழலக்கோயில் கிராமம்
கோபிசெட்டிபாளையம் ஒழலக்கோயில் கிராமம்

இதனையடுத்து ஒழலக்கோயில் ஊராட்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன, மேலும் திருப்பூரிலிருந்து யாரும் அந்த வழியாக வராதவாறு எல்லை பகுதிகள் மூடப்பட்டுள்ளது. வெளி ஆள்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் எனவும்,அந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details