தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நீட்டிப்பு - பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Extension of water opening for lower bhavani canal
தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

By

Published : Jan 14, 2022, 9:01 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையில்
போதிய நீர் இருப்பு உள்ளது.

இதனால் கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 12ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 23 டிஎம்சிக்கு மிகாமல் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பரவலான மழை காரணமாக அவ்வப்போது நீர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நீர் திறப்பை நீட்டிக்க கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பை நீட்டிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நீட்டிப்பு

இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறப்பை மேலும் பத்து நாள்களுக்கு நீட்டிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 25ஆம் தேதிவரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நீட்டிக்கப்படுவதாகவும், இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் இரட்டைபடை மதகு மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.70 அடியாகவும், நீர் இருப்பு 29.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 878 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 3100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசு

ABOUT THE AUTHOR

...view details