ஈரோடு:மேட்டூர் சாலை பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் சதீஸ் என்பவரின், இருசக்கர வாகனத்தில் ஏறிக் கொண்ட கொடிய விஷமுடைய கோதுமை பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
சதீஸ் இன்று (செப்.9) இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது, நெழிந்தபடி பாம்பு ஒன்று கால் வழியாக ஏற முயன்றதைக் கண்டு உடனடியாக அவர் சுதாரித்தார். பின், வாகனத்தை நிறுத்திப் பார்த்தபோது, பாம்பு வாகனத்தின் இருக்கையின் அடிப்பகுதிக்குள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் யுவராஜூக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் வாகனத்தில் இருக்கையின் அடிப்பகுதியை அகற்றிவிட்டு பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். இரண்டு சக்கர வாகனத்தில் மறைந்து இருந்தது கொடிய விஷம் உள்ள கோதுமை நாகத்தின் குட்டி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாம்பு பிடி வீரர் யுவராஜ், பத்திரமாக பாம்பை மீட்டதைத் தொடர்ந்து வனத்துறையின் மூலமாக அது அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.