ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.5,888-க்கும், அதிகபட்சமாக ரூ.8,013-க்கும் விலை போனது. அதேபோல கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ. 5,569-க்கும், அதிகபட்சமாக ரூ.6,569-க்கும் விலை போனது.
வாரத்தின் முதல் நாளான இன்று (மே 9) விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8 ஆயிரத்துக்கும் மேல் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வார முடிவில், விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,9160-க்கு மட்டுமே விலை போனது.