தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.50 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம்: ஈரோடு விவசாயிகள் வேதனை!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரூ.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் சேதம்: ஈரோடு விவசாயிகள் தவிப்பு!

By

Published : May 29, 2019, 11:34 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்காக நெல் மூட்டைகளை அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வந்தனர்.

அப்போது பெய்த கன மழையால் பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் ரூ.50 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் 15 நாட்கள் வரை நெல்லை விற்பனை செய்ய காத்திருக்கவேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், நெல் கொள்முதல் செய்ய அதிக ஆட்களை அமர்த்தி ஓரிரு நாட்களில் கொள்முதல் பணியை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details