ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த ராசாம்பாளையம் கிராமத்தின் வழியாக அனுமதியின்றி நீர் எடுத்துச் செல்லும் லாரிகளும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வரும் எம் சாண்ட் லாரிகளும் அடிக்கடி விபத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் கூறுகின்றனர்.
மேலும், இந்த லாரிகளால் தார்ச் சாலை பெயர்ந்து, மண் சாலையாக மாறியதுடன், மழையால் சேரும் சகதியுமாக மாறி விட்டதாகப் புகார் கூறுகின்றனர். இது குறித்துப் பல முறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், எம் சாண்ட் மணல் லாரி ஒன்று முதியவர் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.