ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மருத்துவம் கிடைக்கும் வகையில் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "ஈரோடு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும் தாளவாடியில் தற்போது இருக்கின்ற ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்துமாறு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது கூடுதல் வசதிகள் மருத்துவமனையில் கிடைக்கும்.