தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை - பாலியல் வழக்கில் தீர்ப்பு

ஈரோடு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

20 ஆண்டு சிறை
20 ஆண்டு சிறை

By

Published : Jul 28, 2022, 7:26 PM IST

ஈரோடு: கட்டட தொழிலாளி நஞ்சுண்டன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, நஞ்சுண்டனை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணையை முடித்து, நீதிபதி மாலதி இன்று (ஜூலை28) தீர்ப்பளித்தார்.

அதில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நஞ்சுண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையாக ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க: சிறுமியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவன் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details