தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு - erode kunderipallam dam opened for irrigation

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள டி.என். பாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த நீரானது பாசனத்திற்காக 40 நாள்களுக்கு வழங்கப்படும் எனப் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணை திறப்பு, ஈரோடு, erode, kunderipallam dam
குண்டேரிப்பள்ளம் அணை திறப்பு, ஈரோடு, erode, kunderipallam dam

By

Published : Aug 21, 2021, 6:18 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குன்றிமலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லிதுர்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரானது இந்த குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கிவைக்கப்பட்டும்.

கடந்த சில நாள்களாக மலைப் பகுதிகளில் பெய்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் 41.35 அடியாக உயர்ந்துள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் குண்டேரிப்பள்ளம், விநோபாநகர், மோதூர், வாணிபுத்தூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்றுவருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையைத் திறக்கும் அலுவலர்கள்

40 நாள்களுக்கு வழங்கப்படும்

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து நேற்று (ஆக. 20) பொதுப்பணித் துறை அலுவலர்கள் நீரை திறந்துவிட்டனர். அணையிலிருந்து வலது கரை வாய்க்காலில் வினாடிக்கு 9 கன அடியும், இடது கரை வாய்க்காலிலிருந்து வினாடிக்கு 19 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.

வாய்க்காலில் பாய்ந்தோடும் நீர்
இந்த நீரானது பாசனத்திற்காக நேற்றுமுதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரையில் மொத்தம் 55 நாள்களில் 15 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டு, 40 நாள்கள் பாசனத்திக்காக 82.944 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது எனப் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால் மதகுப் பகுதியில் உடைப்பு

முன்னதாக, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஆக. 19) மாலை 1,000 கனஅடி வீதம் நீர் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், மலைப்பாளையம் என்ற இடத்தில், 55ஆவது மைலில் மதகின் கீழ் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெள்ளம் போல் வெளியேறியது.

இதையும் படிங்க: 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

ABOUT THE AUTHOR

...view details