தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.. - ஈரோடு மேயர் நாகரத்தினம்

ஈரோட்டிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 8, 2022, 5:12 PM IST

ஈரோடு:மாநகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர், சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை ஆகவே வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய திருப்பணிகள் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்று (செப்.8) நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 5.30 மணி அளவில் 8ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

இதில் ஈரோடு தவிர சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து காலை விமான ராஜ கோபுரங்களுக்கு, பரிவார மூர்த்தங்களுக்கும், கபாலீஸ்வரர் சுவாமிக்கும் புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் தீபாராதனை கல்யாண உற்சவம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவில் சரஸ்வதி எம்எல்ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பழம்பெரும் மதுரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட ஓணம்

ABOUT THE AUTHOR

...view details