தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் செயல்திட்ட அறிவிப்பு கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, நடராஜன், சுப்பராயன், சின்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை மாற்று பாதையில் செயல்படுத்துங்கள்..!' - எம்பிக்கள் எச்சரிக்கை! - விவசாயி
ஈரோடு: "தமிழ்நாட்டின் 13 மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வரும் உயர்மின் கோபுரம் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் மாற்று பாதையில் செயல்படுத்தவிட்டால் தடுத்து நிறுத்தப்படும்" என்று, மக்களவை உறுப்பினர்கள், விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கணேசமூர்த்தி கூறுகையில், "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட 13 மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வரும் உயர்மின் கோபுரம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய், கெயில் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை மாற்று பாதையில் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், அந்தெந்த மாவட்டங்களில் மக்களவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் திட்டங்களை தடுத்து நிறுத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மனிதசங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
கூட்டத்தில் சென்னிமலை, பெருந்துறை, காங்கேயம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.