ஈரோடு:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்வேதா சாமிநாதன். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படிக்க மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகையை தற்போது அவர் பெற்றுள்ளார்.
ஈரோடு காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான ஸ்வேதா சாமிநாதன், டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தின் தலைமைத்துவ மேம்பாடு - தொழில் வளர்ச்சித் திட்டங்களின்கீழ் பயிற்சிப் பெற்றதாகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பெற்றோருடன் மாணவி ஸ்வேதா சாமிநாதன் 14 வயதில் இருந்தே பயிற்சி
ஸ்வேதா சாமிநாதன் 14 வயதிலிருந்தே டெக்ஸ்டெரிட்டி குளோபல் குழுமத்தால் பயிற்சிப் பெற்று, அதன் தலைமைத்துவ மேம்பாடு - தொழில் வளர்ச்சித் திட்டங்களில் ஒரு பகுதியாக மாறினார்.
ஸ்வேதாவின் சாதனை குறித்த செய்தியை டெக்ஸ்டரிட்டி குளோபல் நிறுவனர் ஷரத் சாகர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். டெக்ஸ்டரிட்டி குளோபல் 2008இல் சாகர் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: நாங்கள் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? - மாணவியின் பேச்சும் முழுப்பின்னணியும்..!