தமிழகத்தின் முப்பதாவது சாலைப் பாதுகாப்பு வார விழா சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஆபத்தில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.