நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், முட்டை வியாபாரம் செய்துவருகிறார். இவர் கேரளாவுக்கு தனது லாரி மூலம் முட்டைகளை அனுப்பிஉள்ளார். முட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை நடராஜன் என்பவர் கேரளாவுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வசூல் தொகையான நான்கு லட்சத்து 93 ஆயிரம் ரூபாயைக் கொண்டு வந்துள்ளார்.
முட்டை வியாபாரியிடம் ஐந்து லட்ச ரூபாய் பறிமுதல்! - raid
ஈரோடு: கொடுமுடி அருகே முட்டை வியாபாரி கொண்டு சென்ற நான்கு லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
money seize
இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி இருந்ததால் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் அசரப்புனிஷாவிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.