தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பவானிசாகர் அணை பூங்கா மூன்று நாள்களுக்கு மூடல் - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: பவானிசாகர் அணை பூங்கா நாளை(ஜன.15) முதல் 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.

Breaking News

By

Published : Jan 14, 2021, 5:55 PM IST

Updated : Jan 14, 2021, 8:22 PM IST

ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணை பூங்கா உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சிறுவர் ரயில், கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு மற்றும் அழகான புல்தரைகள், விதவிதமான மலர் செடிகள், காளை மாடு, பட்டாம்பூச்சி, மீன் உள்ளிட்டவைகளின் தத்ரூபமான சிலைகள் உள்ளன.

இயற்கை அழகோடு குளு குளு காலநிலை நிலவும் அணைப்பூங்கா கொரியன் புல் தரையில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் இளைப்பாறி மகிழ்வார்கள். தினமும் பார்வையாளர்கள் பூங்காவில் அனுமதிக்கப்படும் நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பூங்கா, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட நோய் தொற்று பரவல் காரணமாக பவானிசாகர் அணை பூங்கா நாளை முதல் அதாவது ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை அணை பூங்கா செயல்படாது என்றும் சுற்றுலா பயணிகள் அணைக்கு வருவதை தவிர்க்குமாறும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பவானி சாகர் அணை பூங்கா நாளை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படவுள்ளதால், இன்று(ஜன.14) ஏராளமானாோர் கூடினர். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சாலையோரங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தியதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:

9 மாதங்களுக்குப் பிறகு பவானிசாகர் அணை பூங்கா இன்று திறப்பு!

Last Updated : Jan 14, 2021, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details