ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், உதயமரத்திட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, கருணாம்பிகா தம்பதியின் மகனான ஷியாம்சுந்தர்(23), பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் பண்ணாரி சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, உதயமரத்திட்டு மேடான பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது வாகனத்தை மோதியுள்ளார்.
தலைக்கவசம் அணியாததால் இளைஞர் உயிரிழப்பு! - இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடந்த சாலை விபத்தில் தலையில் அடிபட்டு பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் தப்பியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், "விபத்தில் இறந்த ஷியாம்சுந்தர் வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்திருந்தால், விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்திருக்க முடியும், இதுபோன்று சிறு அலட்சியத்தினால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்" என தெரிவித்தனர்