தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து காரை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள், யானை புகுந்து காரை சேதப்படுத்தியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

காரை சேதப்படுத்திய யானைகள்
காரை சேதப்படுத்திய யானைகள்

By

Published : Feb 6, 2022, 11:39 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (பிப்.5) தாளவாடி அருகே உள்ள கெட்டவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள விவசாயி இளங்கோ என்பவரது தோட்டத்தில் நுழைந்தன.

யானைகள்

இளங்கோ தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிருக்குள் நுழைந்து கரும்புகளைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

மூன்று யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் வந்ததைக் கண்ட விவசாயி இளங்கோ அக்கம்பக்கத்து விவசாயிகளுடன் இணைந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை விரட்ட முயன்றனர்.

அப்போது விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளங்கோவின் காரை, யானைகள் தாக்கியதால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து கதவுகள் சேதமாகின.

சுமார் ஒருமணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து காரை சேதப்படுத்தியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: யானைகளை நல்ல முறையில் பராமரிக்க அறிவுரைகள்

ABOUT THE AUTHOR

...view details